Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… பரபரப்பு தகவல்… அமைச்சர் கூறிய விளக்கம் என்ன…?

பெட்ரோல், டீசல் விலை உயர் உள்ளதாக பரவி வரும் தகவல் தொடர்பாக மத்திய அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுஇறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் உத்தர பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்வு முடிவுகள் வருகிற மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகிறது. இதுபற்றி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால்  எரிபொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படவில்லை.

தேர்தல் காரணமாகவே எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக கூறுவது தவறாகும். சர்வதேச சந்தை தான்  கச்சா எண்ணெயின்  விலையை தீர்மானிக்கிறது. ஆனாலும் நாட்டில் கச்சா எண்ணை தட்டுப்பாடு ஏற்படாது என்பதை உறுதியாக கூற முடியும். நமது தேவைளில்  85% கச்சா எண்ணெய் இறக்குமதியையும்,  50 முதல் 50% வரை எறிவாயுவையும்  சார்ந்திருக்கிறது. இருப்பினும் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |