சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், பொன்மேனி புதூரில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய மகன் பவுன் முருகன்(25). இவர்17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விருதுநகரிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பவுன் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.