Categories
மாநில செய்திகள்

சிம்பு வழக்கு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்திற்கு சிம்பு பேசப்பட்ட சம்பளம் எட்டு கோடி என்றும் ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மட்டும் அளித்ததாகவும் சிம்பு தரப்பு  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. இதற்கு பதிலடியாக மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு அவர் மீது சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கம் நடிகர் விஷால் ஆகியோரை  எதிர் மனுதாரராக சேர்ந்திருந்தது.  அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக விஷால்  இருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  நடிகர் சிம்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

Categories

Tech |