Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்… 160 செல்போன்கள்….. தனிப்படை அமைப்பு…. கேராளாவில் மீட்பு…. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்…!!

சென்னையில் 6 மாதத்தில் திருடுபோன 160 செல்போன்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மாவட்டம் மெரினா ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 160 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. 160 செல்போன்களும் மிக விலை உயர்ந்ததாகும். இதனை உடனடியாக தடுக்க சென்னை மயிலாப்பூர் காவல் சரகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் திருடுபோன செல்போன்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள ஒரு முகவரிடம் விற்கப்படுவதாக IMEI எண்ணை trace செய்ததன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்குள்ளவர்களை கைது செய்து செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது. இது குறித்து பேசிய தனிப்படை தலைமை அதிகாரி இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வங்கி கணக்குகள், தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு இயந்திரமாக அது இருப்பதால் அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை செய்துள்ளார். செல்போனை பெற்ற உரிமையாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,

தீபாவளி அன்று வாங்கிய செல்போன்   சில நாட்களில் தொலைந்ததால் மன வேதனைப்பட்டேன். ஆனால் அதனை தற்போது காவல்துறையினர் மீட்டுக் கொடுத்துள்ளனர். தற்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது செல்போனை மீண்டும் எனக்கு மீட்டுக் கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |