தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Categories