Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட்தேர்வு ரத்து செய்யப்படும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

படிப்பதற்கே தடைக்கற்கள் போட்ட இச்சமூகத்தில் படித்தால் தகுதி தன்னால் வந்துவிடும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுத் தந்தோம். அதாவது இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கற்களை போடுகிறார்கள். இதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம், அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும். இதற்கிடையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் “கல்விச் சிந்தனை அரங்கு 2022” சென்னையில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இருநாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தரங்கை வாழ்த்திக் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு பல்வேறு கட்டணச் சலுகைகளை தமிழக அரசு அறிவித்தது. நூறாண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வடிவமைத்த, பண்படுத்திய, செதுக்கிய தமிழகத்தின் கல்வி முறையைச் சிதைக்க நீட் தேர்வை போல பழைய கருத்தாக்கங்களுக்குப் புதிய கல்விக் கொள்கை என்று பெயரிட்டு ஒப்பனைபோட்டு மீண்டும் கொண்டுவருகிறார்கள். கடந்த 8 வருடங்களில் மத்திய பாஜக அரசின் கீழ் கல்வி மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியல் மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழமைவாதமும், மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகின்றது.

அதன்பின் கல்விச் சாலைகளில் வெறுப்பு உணர்ச்சிக்கு வித்திட்டு, இளம் பருவத்திலேயே மாணவர்களின் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்குகிறார்கள். இது தான் கல்விக்கு ஓர் அரசு செய்யும் பங்களிப்பா..? என்று நாட்டில் உள்ள நடுநிலையாளர்கள், மனசாட்சியுடையோர், கல்வியாளர்கள் அறச்சீற்றத்தோடு துணிச்சலோடு கேட்க வேண்டிய கேள்வி ஆகும். ஆகவே இது போன்ற கல்விக் கருத்தரங்குகளில் நமது நாட்டின் கல்வியைச் சூழ்ந்துள்ள தீமைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். இதில் கல்வி என்பது நாட்டின் சொத்து ஆகும். அதனை மத்தியில் ஆளும் ஒருகட்சி சீரழிக்க நினைப்பது உயிர்க்காற்றைப் பறிப்பதற்குச் சமம் ஆகும். இதனை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

Categories

Tech |