அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என அழைக்கப்படும் இந்த பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தென்கிழக்காசியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்காக சிறப்பு நிதி ரூபாய் 6 கோடியே வனத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சிறப்பு நிதியை ஒதுக்கிதமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.