Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தம்… கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் அதிரடி…!!!

உக்ரைனில் போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எம், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், மெக்டொனால்டு மற்றும் ஆப்பிள் ஆகிய பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், கோகோ கோலா, பெப்சி ஆகிய குளிர்பான நிறுவனங்கள், திடீரென்று ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து, கோகோ கோலா நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் வேதனையளிக்கும் மனசாட்சி இல்லாத விளைவுகளை தாங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எங்கள் இதயங்கள் இருக்கின்றன.

எனவே, ரஷ்ய நாட்டில் எங்கள் விற்பனையை நிறுத்திக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பெப்ஸி நிறுவனம், உக்ரைனில் நடக்கும் கொடூர நிகழ்வுகளுக்காக 7Up, பெப்சி-கோலா  மற்றும் மிரிண்டா உட்பட எங்களது உலகளவிலான குளிர்பான பிராண்டுகளின் வணிகம் ரஷ்யாவில் நிறுத்தப்படுவதை அறிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |