நடந்து சென்ற தொழிலாளி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுகுடி பகுதியில் அமைந்துள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி முதுகுடி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் நிலைதடுமாறி மூர்த்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரான பால்ராஜ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.