Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போகி பண்டிகை” பழைய பொருள்களை எரிப்பதை தவிர்ப்போம்…… மாசு கட்டுப்பாட்டு வாரியம்…!!

திருவள்ளூரில் போகியன்று பழைய பொருள்களை கொளுத்தி புகை மண்டலத்தை ஏற்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமென மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பழையன கழிதல், புதியன புகுதல் என்பதே போகி பண்டிகை. அதன்படி தமிழக மக்கள் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் துணிகள், பழைய பொருட்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகையை  கொண்டாடுவர். ஆனால் தற்பொழுது தமிழக மக்கள் அதுபோன்ற பொருட்களோடு சேர்த்து ரப்பர், நெகிழி பொருட்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து கொளுத்தி அதன் மூலம் வெளிவரும் நச்சுப் புகையால் காற்றை மாசுபடுத்தி வருகின்றனர்.

மேலும் உயர் நீதிமன்றமும் பழைய மரம் வரட்டி உள்ளிட்டவற்றை தவிர வேறு எதனையும் தீயிட்டுக் கொளுத்த கூடாது என்று உத்தரவிட்டு உள்ள இந்த சமயத்தில் புகை நமக்குப் பகை என்ற தலைப்பில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை தீயில் கொளுத்தி புகை ஏற்படுத்துவதை முடிந்த  அளவு தடுக்கும் வண்ணம் திருவள்ளூர் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து பேசியும், பொதுமக்களுக்கு நோட்டிஸ் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

Categories

Tech |