சமீபத்தில் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை வெளியிட முடிவெடுத்தது. அதேபோல் எல்ஐசி நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இது குறித்த சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டிருந்த போது செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, செபி எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு எல்.ஐ.சி. பங்கு வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பங்குகள் வெளியீடு மூலம் ரூ.60,000 கோடியை திரட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.