Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மகளிர் தின விழா” பல்வேறு இடங்களில் கொண்டாட்டம்…!!

மகளிர் தின விழா அரசு பள்ளிகள் மற்றும் காவல்நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. இந்த விழா ஆசிரியர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது மாணவிகளுக்கு மங்கள இசை, நடனம், நாதஸ்வரம், பாட்டு, பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கு அருகே ஆலம்பூண்டி பகுதியில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வைத்து கல்லூரி தாளாளர் பூபதி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேச்சாளர் சுமதிஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் பெண்களின் பெருமைகள் குறித்து பேசினார். அதன்பிறகு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

வளவனூர் காவல் நிலையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் நடைபெற்றது. இந்த விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கோதை ராஜேஸ்வரி மற்றும் கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இன்ஸ்பெக்டர் தீபாவுக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.

இதேபோன்று விக்கிரவாண்டி பகுதியில் இருக்கும் கஞ்சனூர் காவல் நிலையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிய தர்ஷினி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி  கேக் வெட்டினார். அதன்பிறகு விளைவு கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள்  வழங்கப்பட்டது.  விக்கிரவாண்டி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன் மற்றும் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து கேக் வெட்டப்பட்டு மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Categories

Tech |