ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள், தங்களை காத்துக் கொள்ள அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகிறார்கள்.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு விரைவாக நடந்த வெளியேற்றம் இது தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் ஆணையத்தினுடைய கமிஷனரான பிலிப்போ கிராண்டி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.