Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! ரஷ்யாவின் எச்சரிக்கை…. கண்டுகொள்ளாமல் அதிரடி முடிவு எடுத்த அமெரிக்கா…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள்  இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யா அதிக வருவாயிடும் ஏற்றுமதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் எரி வாய்வு இறக்கு மதியில் வெளிநாடுகள் தடை விதித்தால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளிடமும் ஆலோசித்த பிறகு ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்க நாளொன்றுக்கு சுமார் 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள்  இறக்குமதிக்கு தடை விதித்துள்ளார். மேலும் ரஷ்யாவில் இது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உக்ரைன் நிலவரம் குறித்து ஜெலன்ஸ்கியிடம்  கேட்டறிந்த பின் உக்ரைன் நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்காக ஒரு பில்லியன் டாலர்  வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |