இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் 80 சதவீதம் உக்ரேனில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கி உள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூபாய் 40 வரை விலை உயர்ந்துள்ளது.
இதற்கு முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் போர் தொடங்கிய பிறகு தற்போது லிட்டர் ரூபாய் 196 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதனைப்போலவே மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் சமையல் எண்ணெய் விலை இவ்வளவு அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.