Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

18 மாதம் தான் அவகாசம்…. பல கோடி ரூபாய் ஒதுக்கீடு…. பணியை தொடங்கி வைத்த அமைச்சர்…!!

இரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 2000-ம் வருடம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆன நிலையில் இதை சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 8 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் அமித், நகர்மன்ற தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பாலத்தின் பணி 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தப் பாலத்தில் வேலை நடைபெற இருப்பதால் வாகனங்கள் வேறு வழியில் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்யதுள்ளனர்.

அதன்படி புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு செல்லும் வாகனங்கள்  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் சர்வீஸ் ரோடு, கீழவீதி, நேரு ரோடு வழியாக செல்ல வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனையடுத்து விழுப்புரத்திற்கு வரும் வாகனங்கள் பாலத்தின் கீழே செல்ல வேண்டும் எனவும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் பழைய வழியிலேயே செல்லலாம் எனவும் அறிவித்துள்ளனர். அதன்பிறகு விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழே உள்ள சாலை வழியாக செல்ல வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு செஞ்சி, திருவண்ணாமலை பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் செஞ்சி பேருந்து நிறுத்தம், சலாவதி ரோடு வழியாக செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |