இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பைக்குகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரூ.80,000-க்கும் கீழ் விற்பனையாகி வரும் பிரபல நிறுவனங்களின் பைக்குகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா எஸ்பி 125:-
123.94 சிசி இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது. இது 6000 rpm-ல் 10.9N-mஐயும், 7500rpm-ல் 8kW பவரையும் வெளியிடக்கூடியது. இந்த இன்ஜின் 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.80,587-ஆக இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஸ்டார்சிட்டி பிளஸ்:-
இதுவரை 30 லட்சம் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் விற்றுள்ளது. இந்த பைக்குகள் மிகச்சிறந்த கட்டமைப்பையும், ஃபூயல் எக்கனாமியையும் கொண்டுள்ளது. இந்த பைக் 125 சிசி சிங்கிள் சிலிண்டரை கொண்டுள்ளது. மேலும் 4500rpm-ல் 8.7Nm-ஐயும், 7350rpm-ல் 6.03 kW-ஐயும் வழங்குகிறது. இதன் இன்ஜின் 4 ஸ்பீட் கான்ஸ்டண்ட் மெஷ் ட்ரான்ஸ்மிஷனில் வருகிறது. ரூ.70,205-ஆக இதன் எக்ஸ் ஷோரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரைடர் 125:-
இந்தியாவில் 2021-ம் ஆண்டில் இந்த பைக் அறிமுகமானது. இந்த பைக் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கில் ரைடிங் மோட், முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் விரைவில் தரப்படவுள்ளது. ரூ.77,500-ஆக இதன் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பிளாட்டினா 110ES டிஸ்க்:–
இந்த பைக்கில் நிறைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.68,384-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட்:-
இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான இருசக்கர வாகனமாக ஸ்பிளெண்டர் பைக் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சென்சாரை அடிப்படையாக கொண்ட ஃபூயல் இன்செக்ஷன் என ஏராளமான புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. டைமண்ட் பிரேம், டூயல் டோன் நிறங்கள், ஐ3எஸ் தொழில்நுட்பம் ஆகியவையும் இந்த பைக்குகளில் தரப்பட்டுள்ளது. ரூ.70,390-ஆக இந்த பைக்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.