Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மின்சாரம் சேகரிப்பு” அறிவியல் கண்காட்சி….. கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….!!

கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில்  நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

மேலும் மாணவர்கள் விலங்குகள், உயிரியல்,  மின்சார சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு புதிய பல அறிவியல் படைப்புகளை வைத்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக மின்சார சேகரிப்பில் புதிய சோலார் முறை, ரீசைக்கிள் எனர்ஜி மூலம் மின்சாரம் தயாரித்தல், சேகரித்தல் உள்ளிட்டவற்றை அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கியது அனைவரிடமும் பாராட்டை பெற்றுத் தந்தது.

Categories

Tech |