உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென கடைகளில் ஆய்வு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், ராஜேஷ்குமார், தியாகராஜன், செந்தில், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் திருப்புவனம் நகரில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான சுவீட், மளிகை பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் 300 கிலோ பிளாஸ்டிக் பொருள்களையும் , காலாவதியான பிக்சர், ஸ்வீட், மளிகை பொருட்கள் என 22 கிலோ மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ஐந்தாயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது போன்று செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.