மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பணியாளர் தேர்வாணையம் [எஸ்.எஸ்.சி மற்றும் சி.எச்.எஸ்.எல்] தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் இன்று முதல் நடைபெறவிருக்கிறது.
இந்த வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.