சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி ரூபாய் 45 கோடி மோசடி செய்ததாக பி.வி சுடலைமுத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்து இருந்ததும், டெபாசிட் செய்யப்பட்ட 100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூபாய் 100 கோடி வைப்பு நிதியை இரண்டு ரூ. 50 கோடியாக நடப்பு கணக்கில் மாற்றி மோசடி செய்ததாக பதிவான புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சிபிஐ 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.