காப்பர் ஒயரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு செய்யாறு பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் விழி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்மோட்டாரை இயக்க சென்ற போது பம்பு செட்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் காப்பர் ஒயர் திருட்டு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நரசிம்மன் மோரணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காப்பர் ஒயரை திருடியது செங்கட்டான் குண்டில் கிராமத்தில் வசிக்கும் நிஷாந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நிஷாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.