Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நஷ்டஈடு வழங்க வேண்டும்” பா.ம.க-வினரின் போராட்டம்…. தென்காசியில் பரபரப்பு…!!

பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் தேரடி திடலில் வைத்து பா.ம.க வினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இவர்கள் மலையான்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் சீதாராமன், துணைத் தலைவர் பால் நேரு, மாநில துணை தலைவர் ஐயம்பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், கருத்த பாண்டியன், பாக்கியராஜ் சுவாமிதாஸ், அமல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |