Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் முருகன் சடலமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற சிலர் இதை பார்த்து சுரண்டை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் முருகனின் உடலை கிணற்றுக்குள் இருந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து முருகனின் மனைவி கனகம்மாள் சாம்பவர் வடகரை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வியாபாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்து முருகன்  உயிரிழந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |