ரசிகர் ஒருவரின் ஏடாகூடமான கேள்விக்கு துணிச்சலாக பதிலளித்துள்ளார் நடிகை யாஷிகா.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இவர் ஜீவா நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் சிறிய வேடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் யாஷிகா பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா மிகவும் பிரபலமானார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் யாஷிகா. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஏடாகூடமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு தயக்கமின்றி பதில் அளித்துள்ளார் யாஷிகா. அது என்னவென்றால் உங்களை முதன் முதலில் நிர்வாண கோலத்தில் யார் பார்த்தார்? எனக் கேட்டதற்கு “டாக்டர் தான்” என தயக்கமின்றி பதிலளித்துள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான பதிலுக்கு ரசிகர்கள் சிலர் பாராட்டி வருகின்றனர்.