Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் பட்டா வழங்க வில்லை ?…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டா வழங்க கோரி  கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு  தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாணாபுரம் பெரிய மலைப் பாதை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எஸ். சி மற்றும் எம்.பி.சி மக்களுக்கு வீட்டு மனை பட்டா ,மின் இணைப்பு வழங்குதல் மற்றும் அப்பகுதியில்  அரசு நிலத்தை ஆக்கிரமித்த உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பரிமளா, வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |