தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று(10.03.2022) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.போரூர் – திருமுடிவாக்கம் பகுதி: 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி: சி.டி.எச் ரோடு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், ஆவடி பேருந்து நிலையம், பி.வி. புரம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.
காரனோடை – சோத்துப்பேரும்பேடு பகுதி: கரோனோடை கடை தெரு, தேவனாரி, வி.ஜி.பி மடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கும்மிடிப்பூன்டி பகுதி: குமிடிப்பூண்டி கடைதெரு, மா.போ.சி. நகர், ரெட்டம்பேடு, சோழியம்பாக்கம், அப்பாவரம், மங்காவரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.நீலாங்கரை – ஏழில்நகர் பகுதி: மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், நாராயணன் நகர், கோபிநாத் அவென்யு மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: ஆர்.எம்.டி யார்ட், எம் பிளாக் ராஜ்பவன் பகுதி சர்தார் பட்டேல் ரோடு, அண்ணா சாலை ஆலந்தூர் பகுதி எம்.கே.என் சாலை, சுப்பா ரெட்டி காலனி, காந்தி மார்கெட் புழுதிவாக்கம் பகுதி பாலாஜி நகர், கிராம சாலை, கஸ்தூரி பாய் தெரு, சுவாமி நகர், இந்தியா காலனி, ஜெயா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் பகுதி: க.க நகர் கிழக்கு பிரிவு, எம்.ஜீ.ஆர் நகர் பகுதி, க.க. நகர் மேற்கு பிரிவு, அசோக்நகர் கிழக்கு பிரிவு, க.க நகர் தெற்கு பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி – அலமாதி பகுதி; மோரைசாய் பாபா கோயில், வேல்டெக் காலேஜ், வெள்ளனூர், வேல்டெக் ரோடு (அலமாதி ரோடு) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வில்லிவாக்கம் பகுதி: திருவீதி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, கிழக்கு மாட தெரு, அம்பேத்கர் தெரு, மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் – மாடம்பாக்கம் பகுதி; கே.கே சாலை, கோபலபுரம், சுசிலா நகர், விஜயநகரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.ராமநாதபுரம் மாவட்டம் இன்று 33/11 KV ராமேஸ்வரம் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பனி காரணமாக இன்று (10.03.2022 ) காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ராமர் தீர்த்தம் பேருந்து நிலையம், வேர்கோடு, தனுஷ்கோடி, லெட்சுமண, தீர்த்தம், திட்டக்குடி தெரு, TV ஸ்டேஷன், மார்க்கெட் தெரு, ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரத வீதிகள் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நிறைவடைந்த பிறகு மின் விநியோகம் இருக்கும்.
விருதுநகர் மாவட்டம்:
ராஜபாளையம் அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இதன் காரணமாக இன்று (மார்ச் 10)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்வினியோகம் பெறும் பகுதிகளான சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சியாபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைசெய்யப்படும்.
விழுப்புரம் மாவட்டம்:
கெடார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று (மார்ச் 10) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.கெடார், அரியலுார் திருக்கை, மல்லிகைப்பட்டு, மாம்பழப்டடு, வெங்கந்துார், அகரம்சித்தாமூர், அத்தியூர்திருக்கை, காணை, கோனுார், கக்கனுார், காங்கேயனுார், ஆரியூர், சாணிமேடு போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேலும் திருப்பாச்சனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பில்லுார், கொளத்துார், காவணிப்பாக்கம், சித்தாத்துார், சேர்ந்தனுார், புருஷானுார், ஆனாங்கூர், அத்தியூர்திருவாதி, தென்குச்சிப்பாளையம், திருப்பாச்சனுார், தளவானுார், வேலியம்பாக்கம், வி.அரியலுார், சாமிப்பேட்டை, பிள்ளையார்குப்பம், கொங்கரங்கொண்டான், ராமநாதபுரம், அரசங்கலம் போன்ற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.