உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட் செய்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போது 9வது நாளாக நேற்றும் நீடித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாட்டிலும் போர்வீரர்கள், மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பல, போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
போரை நிறுத்துங்கள் புதின்
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்கரும்புகை
வான் விழுங்கும்பகலை
இருள் குடிக்கும்கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்போரை நிறுத்துங்கள் புதின்
— வைரமுத்து (@Vairamuthu) March 9, 2022
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் குறித்து ட்விட்டரில் கூறியுள்ளதாவது,
போரை நிறுத்துங்கள் புதின்
மில்லிமீட்டராய் வளர்ந்த உலகம்
மீட்டர் மிட்டராய்ச் சரியும்.
கரும்புகை வான் விழுங்கும்
பகலை இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும்
ஆயுதம் மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்…. என்று பதிவிட்டுள்ளார்.