வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பணத்தான்காட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் செல்வகுமார் வீடு திரும்பவில்லை.
இதனால் செல்வகுமாரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவருடைய தாய் சின்னபொண்ணு அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான செல்வகுமார் எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.