மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிசாவடி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஓமலூர் பகுதியில் வசிக்கும் கௌதம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை கடத்திய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.