கன்னி ராசி அன்பர்களே…!
இன்று மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் இருக்கும்.
திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று நிதானமாக யோசித்து செய்வது எந்த ஒரு காரியமும் நல்லது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த பழைய பகைகள் மாறும். நட்பு ரீதியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாளாக இருக்கும். உறவினர் வகையிலும் உன்னத தகவல்கள் வந்து சேரும். மற்றவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பொது காரியங்களில் ஈடுபடும் போதும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். நண்பர்களுடன் இனியதாக பொழுதை கழிப்பீர்கள். இன்று காதலர்களும் முன்னேற்றமான சூழல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.