Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு கடன்களா?…. இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற  கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க  வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வீதத்தில் 20 லட்சமும், சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 30 லட்சம் வழங்கப்படும், கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சமும், சுய உதவி குழுவில் ஒரு நபருக்கு ஒரு லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத  வட்டி அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். எனவே சிவகங்கையை சேர்ந்த  கிறிஸ்துவர்கள், இஸ்லாமிய, சீக்கிய, புத்தர், ஆகிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் சான்றிதழ், வருமானச் சான்று, உணவு பங்கீட்டு அட்டை, திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |