மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சு வார்த்தை ஏதும் காட்டாமல் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது.
லாபம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் கவலை வேண்டாம், அனைத்துமே சரியாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமையலாம் பார்த்துக் கொள்ளுங்கள். அனுசரித்துச் செல்லுங்கள். கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் பேசுங்கள்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வதற்கு கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் . அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்