அண்மையில் உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல்
மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மேலும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில், பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள், உத்தராகண்டின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச்.10) காலை முதல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.