Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினிக்கு வந்த சோகமான செய்தி… கவலையில் ரஜினி…!!!

ரஜினிக்கு முதல்முறையாக ரசிகர் மன்றம் தொடங்கிய ஏ.பி.முத்துமணி காலமானார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். வில்லனாகவும் நடித்து வந்த ரஜினி இதுவே தனக்கு போதுமானது என்று கூறிவந்த நிலையில் கமல் அவரின் மனதை மாற்றி ஹீரோவாக நடிக்க வைத்தார். படிப்படியாக வளர்ந்து ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு முதன் முறையாக ரசிகர் மன்றத்தை துவங்கிய ஏ.பி.முத்துமணி நேற்று காலமாகியுள்ளார். 1976-ம் வருடம் ரஜினிக்கு ரசிகர் மன்றம் துவங்கியவர். இவர்தான் ரஜினிக்கு முதல் முறையாக ரசிகர் மன்றத்தை தொடங்கினார். ரஜினி முத்து மணியுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வாராம். இந்நிலையில் முத்துமணி காலமானது ரஜினி மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |