இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE ஸ்மார்ட்போனை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் ஐபோன் SE அறிமுகமானது. அதனை தொடர்ந்து ஐபோன் SE 2 மாடல் 2020-ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதையடுத்து ஐபோன் SE 2022 மாடல் தற்போது அறிமுகமாக உள்ளது. A15 பயோனிக் புராசஸர் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
ஐபோன் 13 சீரிஸ் போன்களிலும் இந்த புராசஸர் தான் இடம்பெற்றுள்ளது. 12 மெகாபிக்சல் ரியர், 4.7 இன்ச் டிஸ்பிளே, 7 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 128ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்டுகள், கேமரா, 64ஜிபி, SE கேட்டகிரியில் முதல் 5ஜி போன் இதுதான். இந்த போன் 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனுடைய ஆரம்ப விலை ரூ.43,900 என்று கூறப்படுகிறது. வரும் 11-ஆம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. பின்னர் இந்த போன் வரும் 18-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.