பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 20.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BSNL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director (Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
BSNL கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant or Cost Accountant படித்திருக்க வேண்டும் அல்லது MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 45 என்றும் அதிகபட்சம் 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BSNL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.75,000/- முதல் ரூ,1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BSNL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.04.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.