தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரூ.5.66 கோடி மதிப்பில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.