ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களையும், எலெக்ட்ரானிக் பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 12ஆம் தேதி பிக் சேவிங்ஸ் டேய்ஸ் என்ற இந்த திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும்.
லேப்டாப், மொபைல் போன், ஸ்மார்ட்வாட்ச், கேமரா உள்ளிட்ட பல பொருட்களும் 80 சதவீதம் வரையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். Realme Watch, Lenovo Yoha Tab, Ipad Air (2020) உள்ளிட்ட பல பொருட்களுக்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் ஃபிளிப்கார்ட் வெப்சைட்டில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் போது SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் கூடுதலாக அவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதோடு மட்டுமில்லாமல் ஈஎம்ஐ, நோ காஸ்ட் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
ரியல்மீ, ஆப்பிள், சாம்சங், போகோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை 80 சதவீதம் வரையில் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் பெற்று கொள்ளலாம். ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களுக்கும் தள்ளுபடி 60 சதவீதம் வரையில் வழங்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளது.