மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்வைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்ப தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் அதிகப்படியான செலவுகள் ஆவதற்காக இதுபோன்ற நடைமுறையை கொண்டு வருவதாக கருத்துக்கள் எழுந்தன. தற்போது அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories