தமிழ்நாடு சுகாதார துறை தமிழ்நாட்டில் தங்களது பணியின் மூலம் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 2016-2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது. அவ்வாறு விருதுபெறும் மாவட்ட ஆட்சியர்கள் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
2016-17 விருதுநகர் ஆட்சியராக இருந்த சிவஞானம், 2017-18 திருவாரூர் ஆட்சியராக இருந்த நிர்மல்ராஜ், 2018-19 சிவகங்கை ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன், 2019-20 விருதுநகர் ஆட்சியராக இருந்த சிவஞானம் (மீண்டும்) மற்றும் 2020-21 திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றன.