Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டையும், மக்களையும் புதின் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்….. -ஒலேனா ஜெலன்ஸ்கோ கடிதம்….!!!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கோ இணையதளத்தில் ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் “எங்கள் நாடு மிகவும் அமைதியாகவும், உயிர்களால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் எங்கள் நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குடிமக்கள் மீதான படுகொலையாகும். இந்தப் படையெடுப்பின் கொடூரமான பேரழிவு என்னவென்றால் 8 வயது ஆலிஸ், கியேவைச் சேர்ந்த போலினா, 14 வயது அர்செனி உள்ளிட்ட குழந்தைகள் பலியானது. இதனிடையில் ரஷ்யா பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை என்று கூறிய நிலையில், அவர்களிடம் கொலை செய்யப்பட்ட இந்த குழந்தைகளின் பெயர்களை நான் முதலில் கூறுகிறேன்.

கடந்த வாரத்தில் எங்கள் நாட்டில் புதிதாக பிறந்த பல்வேறு குழந்தைகள் இதுவரையிலும் அமைதி என்பதை அறியவில்லை. ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனையும் அதன் மக்களின் தேசபக்தியையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். உக்ரைன் அமைதியை விரும்பினாலும், அதன் எல்லைகளையும் அதன் அடையாளத்தையும் பாதுகாக்கும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் எங்களுக்கு தரும் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அணு ஆயுதப் போரை தொடங்குவேன் என மிரட்டி வரும் புதினை தடுக்காவிட்டால், உலகில் நமக்கு பாதுகாப்பான இடம் கிடைக்காமல் போய்விடும் என்று அவர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |