அருந்தியர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் கிராமத்தில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் அனைவருக்கும் பொதுவாக ஓரு சுடுகாடு மட்டுமே இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அருந்தியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் ஊர்வலத்தில் வந்த ஒருவரை விளக்குமாரை கொன்டு தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருந்தியர் சமூகத்தினர் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது