இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் கச்சேரி சாலை போலீஸ் குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெரினா காவல் நிலையத்தில் ரோந்து கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயச்சந்திரன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த மாதம் 3-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த தேன்மொழி உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் தீ காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.