அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயார் செய்தது உறுதியானது.
இதனையடுத்து காவல்துறையினர் பட்டாசு தயாரித்த சங்கரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.