உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது.
கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடஙக்ளில் 89 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. பெருன்பான்மைக்கு 59 இடங்களே தேவைப்படும் நிலையில் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங் விரைவில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சரண்ஜித் சிங், சித்து என முன்னணி தலைவர்களை ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர். காங்கிரஸின் கோட்டையாக இருந்த பஞ்சாபில் முதல்முறையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பிதுள்ள ஆம் ஆத்மி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.