பாகிஸ்தானில் ஒரு நபர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் ஐந்து தடவை கொடூரமாக குழந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜீப். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது, ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஷாஜீப் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் 5 தடவை சுட்டு கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.