Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் சண்முகக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அதில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில்   சண்முகக்கனியின் மனைவி ராசாத்தியம்மாள் சண்முகக்கனியை விட்டு  பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகக்கனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  சண்முகக்கனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |