Categories
உலக செய்திகள்

நோட்டா அமைப்புகள்…. “காலில் விழுந்து கெஞ்சும் நாடாக இருக்க மாட்டோம்”…. உக்ரைன் அதிபரின் ஆவேசம்….!!!

அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர்த்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. இதனை தொடர்ந்து  அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர்த்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நோட்டா அமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யாவுடனான போர் காரணத்தினால் உக்ரைனை நோட்டா அமைப்பில் இணைப்பதற்கு முனைப்பு காட்டவில்லை என்றும் அஞ்சுவதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக  இருக்கக் கூடாது. மேலும் எனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை.

இந்த நிலையில் உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான் பாஸின் நாடுகள் ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்நாடுகளின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவிடம் விவாதிப்போம். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அதிபர் புதின் நேரடியாக வர வேண்டும். இதனிடையில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குடியரசுகள் போலியானவை அங்கு வாழும் மக்கள் உக்ரைன் உடனே சேர விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |