Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விரைந்து செயல்பட்ட கல்லூரி மாணவி…. வாலிபர்களை மடக்கி பிடித்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போன் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தி விஜயமங்கலம்- ஊத்துக்குளி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆர்த்தியின் கையில் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் இருந்து செல்போனை வாங்கி ஆர்த்தி தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆர்த்தியின் உறவினர்கள் அவர் கூறிய அடையாளங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன், பிரகாஷ் மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, செல்போன்களை பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |